
குஜராத்தில் பிறந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தவர் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
‘ஹேப்பி வெட்டிங்’, ‘ப்ரஷர் குக்கர்’, ‘யசோதா’ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த ஆண்டு வெளியான ‘அயோத்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நடிகையாக அறிமுகமானார். அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
நடிகர் விஜய்குமாருடன் இணைந்து ‘எலக்ஷன்’ படத்தில் நடித்தார்.
தற்போது கவினுடன் இணைந்து ‘கிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார்.
ப்ரீத்தி அஸ்ராணியை பொறுத்தவரை அவரது ‘ஹோம்லி லுக்’ ரசிகர்களை கவர்ந்துள்ளது.