நடிகர் விஜய் நிகழ்வில் கவனம் ஈர்த்த 10 தருணங்கள் - போட்டோ ஸ்டோரி

Vijay Felicitates Students in chennai
Vijay Felicitates Students in chennai
Published on
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய்,  “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று பேசியிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

மேடையில் விஜய்யிடம் சிறுமி ஒருவர் ரோஜாப்பூ நீட்டினார். உடனே அந்த சிறுமியை செல்லமாக கண்டித்த விஜய் பின்பு பூவை வாங்கிக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேடையில் மாணவியின் தாய் ஒருவர் விஜய்க்காக ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடினார். இதைக்கேட்ட விஜய் சிரித்தார்.

இன்றைய நிகழ்வில் பார்வையற்ற மாணவி ஒருவர் பரிசையும் சான்றிதழையும் விஜய் கையிலிருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விஜய் மைக்கை பிடித்துக்கொள்ள அந்த மாணவி மேடையில் பேசினார்.

மேடையில் 2 மாத கைக்குழந்தைக்கு நடிகர் விஜய் ‘தமிழரசி’ என பெயர் சூட்டினார். விஜய் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காகவே தன் மகளுக்கு பெயர் சூட்டாமல் காத்திருந்ததாக தந்தை தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதாவுக்கு பரிசையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார் விஜய்.

விஜயைக் கண்டதும் மாணவிகள் மேடையில் கண்ணீர்மல்க நெகிழ்ந்த சம்பவங்களும் அரங்கேறின.

விஜய்க்கு பலூன் கொடுத்தது, கன்னத்தை கிள்ளியது உள்ளிட்ட சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

மாணவி ஒருவர் விஜய் மற்றும் அவரது தாயார் ஷோபாவின் புகைப்படங்களை வரைந்து அவருக்கு பரிசளித்தார்.

மேடையில் விஜய்க்கு மாணவி ஒருவர் சல்யூட் அடித்த நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in