இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில், ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் நடிப்பில் ‘ஹீராமண்டி: தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரும் இந்தி நடிகர் ஜஹிர் இக்பாலும் காதலித்து வந்தனர்.