நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரும் இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் புதன்கிழமை நடைபெற்றது.
முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமண நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், டேவிட் தவண், ஷாகித் கபூர் உள்ளிடடோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.