நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமண நிகழ்வில் பிரதமர் மோடி - புகைப்படத் தொகுப்பு

actor suresh gopi daughter marriage
actor suresh gopi daughter marriage
Published on
மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா திருமணம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மலையாள நடிகரும், பாஜகவின் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபியின் மகள் பாக்யா. இவருக்கும் தொழிலதிபர் ஸ்ரேயாஸ் மோகனுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து இன்று கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மணமக்களிடம் மாலையைக் கொடுக்க, அவர்கள் பிரதமர் கையிலிருந்து அதை வாங்கி ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டனர்.

பின்னர், மணமக்கள் பிரதமரிடம் ஆசி பெற்றனர்.  முன்னதாக பிரதமர் மோடி கோயிலில் வழிபட்டார். இந்த திருமணத்தில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, திலீப், ஜெயராம் உள்ளிட்ட மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோயிலில் இன்று காலை திருமணம் செய்து கொண்ட மேலும் 10 தம்பதிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in