நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர், கான்ஜூரிங் கண்ணப்பன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அரண்மனைக்கிளி, ஆனந்த ராகம் உட்பட சில சீரியல்களில் நடித்துள்ள சங்கீதா, மாஸ்டர், வீட்ல விஷேசம், பாரிஸ் ஜெயராஜ் உட்பட சில திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள், மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையடுத்து சமூக வலைதளத்தில் அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.