இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்தீப் ஹூடா. 2001ஆம் ஆண்டு வெளியான ‘மான்சூன் வெட்டிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2010ல் வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’ படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து ‘சாஹேப், பிவி ஆர் கேங்ஸ்டர்’, ‘ரங் ரஸியா’, ‘ஹைவே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை ’எக்ஸ்ட்ராக்சன்’ ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த நவ.29 அன்று ரன்தீப் ஹூடா, மணிப்புரி நடிகையும் பிரபல மாடலுமான லின் லைஷ்ராம் திருமணம் நடைபெற்றது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மணிப்பூர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (நவ.2) நடைபெற்றது.