மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயராம். அவர் மலையாள நடிகை பார்வதியை காதலித்து கரம்பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் காளிதாஸ் தமிழில் ‘ஒரு பக்க கதை’, ‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவரது நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது.