கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம், அவருக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கான மற்றும் நடிப்பதற்கான உத்வேகத்தையும் சேர்த்தே கொடுத்தது. காரணம், கடந்த 2018-ம் ஆண்டு கமல் தயாரித்து, நடித்து இயக்கிய ’விஸ்வரூபம் 2’ திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.