வெங்கட் பிரபு இயக்கும் விஜய் படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
‘லியோ’ படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் 2 வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு வேடத்தை மிகவும் இளமையாக காண்பிக்க உள்ளனர். இதற்காக படக்குழு அமெரிக்கா சென்றது. ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாக காண்பிக்க இருக்கின்றனர்.
இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, பிரியங்கா மோகன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீனாட்சி சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.