நடிகர் அஜித்குமார் தனது பைக் டூர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஓமனிலிருந்து நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் வருகை தரும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் சென்னை வந்த அஜித்குமார் தனது நண்பர் அஜித் நம்பியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.