கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’.
சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.