தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்பவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.