‘எரும சாணி’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர் விஜய். யூடியூப் சேனலில் கலக்கி வந்த இவர், ‘ஹிப் பாப்’ ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தார்.
இதையடுத்து அருள் நிதி நடிப்பில் உருவான ‘டி பிளாக்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்நிலையில் ‘எருமை சாணி’ விஜய் தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்திராவை கரம்பிடிக்க உள்ளார்.
விஜய் மட்டுமில்லை நட்சத்திராவும் மீடியாவில் தான் இருக்கிறார். மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர் என பலமுகங்களை கொண்டவர் நட்சத்திரா. விஜயும் நக்ஷத்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் இன்று நடைபெற்றது.