1. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படவரிசையில் 32வது படமாகவும், கார்டியன்ஸ் படவரிசையின் மூன்றாவது பாகமாகவும் வெளியாகியிருக்கிறது கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3.
2. ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்துக்குப் பிறகு கடும் நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்ட மார்வெல் நிறுவனம் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’ மூலம் கம்பேக் கொடுத்துள்ளது.
3. படத்தின் டைட்டில் கார்டிலேயே சரவெடியாக தொடங்கும் திரைக்கதை, ஆக்ஷன், கண்ணீர், சிரிப்பு என ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.
4. கார்டியன்ஸ் படங்களுக்கே உரிய வண்ணமயமான செட்கள், கலர் கலர் ஏலியன்கள் என ஒவ்வொரு காட்சியும் கண்ணை பறிக்கின்றன. ஒளிப்பதிவு மிகப்பெரிய பிளஸ்
5. படம் முழுக்க வெடித்துச் சிரிக்க வைக்கும் இடங்கள் உள்ளன. எனினும் அவை காட்சிகளின் தீவிரத்தை குறைக்கவில்லை.
6. இதுவரை வந்த மார்வெல் படங்களில் இல்லாத அளவுக்கு எமோஷனல் காட்சிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் ஒரு காட்சி, கல் மனதையும் கரைத்து கண்ணீர் விட வைக்கும்.
7. ‘கார்டியன்ஸ்' பட வரிசையில் இதுவே கடைசிப் படம் என்பதை மார்வெல் நிறுவனம் அறிவித்து விட்ட நிலையில், தன்னுடைய ஆதர்ச கதாபாத்திரங்களுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கன்.