‘ஆர்ஆர்ஆர்’படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடல், சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. ஆஸ்கர் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் விருதைப் பெற்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.