பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’, ‘தனு வெட்ஸ் மனு’, ‘சில்லர் பார்ட்டி’, ‘வீர் தி வெட்டிங்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருபவர்.
ஸ்வரா பாஸ்கர் தன் நீண்ட நாள் காதலரும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவருமான ஃபஹத் அகமதுவை நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.
ஸ்வரா பாஸ்கரின் திருமண நிகழ்வுப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.