கே.விஸ்வநாத் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி | புகைப்படத் தொகுப்பு

Published on
தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், தாதா சாகேப் விருது பெற்ற பழம்பெரும் இயக்குநருமான கே.விஸ்வநாத் வியாழக்கிழமை காலமானார்.அவருக்கு வயது 92.

படங்கள்: நாகரா கோபால்
தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், தாதா சாகேப் விருது பெற்ற பழம்பெரும் இயக்குநருமான கே.விஸ்வநாத் வியாழக்கிழமை காலமானார்.அவருக்கு வயது 92. படங்கள்: நாகரா கோபால்
19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

50 திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநராக அறியப்பட்டாலும், நடிப்பிலும் கவனம் செலுத்தினார். 2000களில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இயக்குநர் கே.விஸ்வநாத், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
ஹைதராபாத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in