தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது 38 வயதாகும் சர்வானந்த் அவரது காதலியை நிச்சயத்தார்த்தம் செய்து இருக்கிறார்.
அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். அவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் அனுமதி உடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.