தந்தை - மகன் உறவை ‘நார்மலைஸ்’ செய்ய வேண்டிய தேவையை ‘டான்’ புறந்தள்ளுகிறது. படம் முழுக்கவே மகனுக்காக வாழ்கிறேன் என கூறிய அப்பா ஒருபோதும் நிம்மதியாக இருந்திருக்கமாட்டார். அப்பா கொடுத்த சித்ரவதையால், ‘அப்பா பேச்ச எடுக்காத’ என எல்லா இடங்களிலும் அப்பாவை புறந்தள்ளியே இருப்பார் மகன். இறுதியில் இருவரும் உன்னதமான உறவை இழந்திருப்பர். மகனை முடிந்த அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்திவிட்டு, இறுதியில் ‘எல்லாம் உன் நல்லதுக்கு’ என முடிப்பது அபத்தமானதுதானே?!