இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 12, 2026

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 12, 2026
Published on: 

வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையே என பார்லி குழு அறிக்கை

தமிழகம் முழுவதும் 1,577 ரவுடிகள் கைது

"உலகம் முழுவதும் உணவின்றி வாழும் பரம ஏழைகளின் எண்ணிக்கை மேலும் 49 லட்சம் உயரும்" - ஐ.நா கவலை

நொய்டா விமான நிலையத்தில் வெள்ள நீர்; விமான நிலையத்தில் இனி படகு ஓடுமா என அகிலேஷ் யாதவ் நையாண்டி

திரைத் துறையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்

"நீட் தேர்வு தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார்" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்

"எம்பி-க்கள் கூட்டம், பேரவையில் தீர்மானம் இவற்றை எல்லாம் பார்க்கும் போது தவெக அரசை காங்கிரஸ் தான் இயக்குகிறதோ என்று சந்தேகம் வருகிறது" - டிடிவி தினகரன்

நீர் திறப்பு இல்லை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கண்டுகொள்ளாத கர்நாடகா

"சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக சுமார் 3,700 செயலிகள் மற்றும் 32 லட்சம் வங்கிக் கணக்குகள் முடக்கம்" - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

"தமிழகத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் கனிமத் திருத்தச் சட்டம் தேவையற்றது" - அன்புமணி ராமதாஸ்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, எஃப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப் பரிந்துரை

ஆம்ஸ்ட்ராங் கொலை: சகோதரர் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மீள் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

சவுதி அரேபியாவில் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் பலி

ஆம்ஸ்ட்ராங் கொலை: சகோதரர் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மீள் விசாரணையைத் தொடங்கியது சிபிஐஉலகத் தமிழ் மாநாடு என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கித் தமிழை சர்வதேச மொழியாக உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற தமிழ்ப் பேரறிஞர் தனிநாயகம் அடிகள் குறித்த ஆவணப்படம் ஆகஸ்ட் 22-ல் ரிலீஸ்

மாருதி சுசுகி, ஹூண்டாய், கியா, எம்ஜி, ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் இன்னும் ஒரே மாதத்தில் 5 வகையான புதிய கார் ரகங்களை இந்தியச் சந்தையில் களமிறக்க உள்ளன.

உடல் எரிச்சலால் இரவு - பகல் பாராது குளத் தண்ணீரிலேயே குடியிருக்கும் வங்கத்தின் 16 வயது சிறுவன் இக்பால். ‘ஜின்’ என்ற அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்டுவிப்பதாக அனவுன்ஸ்மென்ட்!

"52 நிமிடங்களில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம். ஃபுட் டெலிவரி ஆப்களை விட மிக வேகமாகவும் விரைவாகவும் டெலிவரி செய்யும் புதிய சாம்பியனாக மோடி - ஷா ஜோடியின் 'புல்டோசர் ராஜ்' உருவெடுத்துள்ளது" - மாணிக்கம் தாகூர்

‘சோனி மராத்தி’ டிவி சேனல் நடத்தும் ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார் பாலிவுட் நடிகை மாதுரி தீக் ஷித்

பாலிவுட் ஹீரோக்களான அக்‌ஷய் குமாரும் சயீஃப் அலிகானும் ‘கைவான்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள்

‘கங்குவா’ தோல்விக்குப் பிறகு சிறுத்தை சிவா அமைதியாகப் பதுங்கியிருக்கிறார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் சிவாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் துளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மூலம் விஜய் சேதுபதிக்கு வெளிச்சம் தந்த பாலாஜி தரணிதரன் மீண்டும் அவரை வைத்து ‘பத்தா’ படத்தை இயக்குகிறார்

அம்பேத்கருக்கு ஆளுயர வெண்கலச் சிலை: பரிசீலித்து முடிவெடுக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

"நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது" - முதல்வர் விஜய்

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலையில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியானது

"லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினர்களை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும்" - ஜோதிமணி விசிக எம்எல்ஏ

ரியோ ராஜ் நடிப்பில் உருவான ‘ராம் இன் லீலா’ டிரெய்லர் வெளியானது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

சந்திரசேகரன் ராஜினாமாவை தொடர்ந்து டிசிஎஸ் பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சி

முல்லை பெரியாறு அணையை மராமத்து செய்யவிடாமல் கடந்த 12 ஆண்டுகளாக கேரளா முட்டுக்கட்டை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

டாடா சன்ஸ் குழும தலைவர் பதவியிலிருந்து என்.சந்திரசேகரன் விலகல்

"நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்" - நிதியமைச்சர் மரிய வில்சன்

"முந்தைய அரசின் ஒப்பந்த முறைகேடுகளை ஆராயத் தொடங்கியுள்ளோம்" - திமுகவுக்கு நிதியமைச்சர் அலாரம்

நவம்பர் 1-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2-ஏ தேர்வுகள் நடத்த திட்டம்

"தமிழ் மொழி பேச்சு விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டுவிட்டேன்" - மரிய வில்சன்

"உடன் பிறந்த தம்பியின் குடும்பத்தை உருட்டுக் கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும் இரக்கத்தையும் தான் உலகமே கண்டதே" - மரிய வில்சனுக்கு சீமான் பதிலடி"தமிழகத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் கனிமத் திருத்தச் சட்டம் தேவையற்றது" - அன்புமணி ராமதாஸ்வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையே என பார்லி குழு அறிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in