இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 11, 2026

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 11, 2026
Author:
Published on

"விவிலியத்தில், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று சொல்வார்கள். கிறிஸ்தவப் பிரநிதிகள் நேற்று தட்டினார்கள். இன்று தீர்மானம் வந்துவிட்டது" - அமைச்சர் வன்னி அரசு

"திமுக ஆட்சியில் இடங்களே இல்லாமல் பட்டா கொடுக்கப்பட்டது உண்மைதான்" - அமைச்சர் செங்கோட்டையன்

"உலகப் பல்கலை. தரவரிசையில் சேரும் இந்தியப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு" - மத்திய அரசு

"கதர் ஆடையும் தமிழ் மொழியுமாக கடைசி வரை வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்" - பேரவையில் பிரேமலதா பெருமிதம்

"எஃப்சிஆர்ஏ வேண்டாம் என்று மத்திய அரசு சொல்லவில்லை" - போஜராஜன்

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் வளர்ந்து வரும் ‘அரசன்’ படத்தின் இரண்டாம்கட்டப் படப்படிப்பு தொடங்கியது

"எஃப்சிஆர்ஏ நிதி வெளிநாட்டில் இருந்து தவறான காரியங்களுக்காக புறவழி வாசல் வழியே வருவதை அரசு தடுக்க வேண்டும்" - பிரேமலதா கோரிக்கை

மத்திய அரசின் எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி சட்டப் பேரவையில் தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்

கவின் - நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ் ஆகும் நிலையில், இருவரும் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் படங்களை நயன்தாரா உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்

"60 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் பேரியக்கம் கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றிருப்பதை நீங்கள் (திமுக) விரும்பவில்லை என்று தெரிகிறது" - அமைச்சர் விஸ்வநாதன்

"அனிதாவின் மதிப்பெண்ணை டி-ஷர்ட்டாக அணிந்தவர் விஜய்" - அமைச்சர் ராஜ்மோகன்

"தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்" - அமைச்சர் அருண்ராஜ்

"உங்களுக்கும் சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும்" - சட்டசபையில் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in