இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 7, 2026

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 7, 2026
Author:
Published on

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா

"நான் தமாகாவில் இருந்த போது முத்தமிழ் அறிஞர் கலைஞரை கைது செய்த காட்சியைப் பார்த்து கலங்கினேன்" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

"கர்நாடகா செல்லும் போது தமிழக முதல்வருக்கு ஒரு தலைகுனிவு என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டு எழும்" - பிரேமலதா

உயர்கிறது மதுபானங்கள் விலை

"‘தொட்டவங்கள’ விடமாட்டோம் என்கிறீர்கள். இதுக்கு முன்னாடி ‘தொட்டவங்க’ எல்லாரும் சனிக்கிழமை தோறும் பனையூரில் நடக்கும் வாரச் சந்தைக்கு வந்துக்கிட்டேதான் இருக்காங்க" - ரகுபதி கிண்டல்

தைரியம் இருந்தால் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து எதற்காக தொள்ளாயிரம் கோடி ரூபாய் வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள் - உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா நெருக்கடி

"முதல்வருக்கு ஒன்றும் தெரியாது. ஆமாம், ஊழல் செய்யத் தெரியாது, ஏமாற்றத் தெரியாது, ஊரை அடித்து உலையில் போடத் தெரியாது" - அமைச்சர் ராஜ்மோகன்

விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா காணொலியில் 20 நிமிடம் வாதம்

"பூஜ்ஜியத்தில் இருந்தவர்களே ராஜ்ஜியத்தை அமைத்த போது நாங்களும் மீண்டும் அம்மாவின் ராஜ்ஜியத்தை அமைப்போம்" - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ இன்று ரிலீஸ்

"தொகுதி வரையறை தொடர்பாக முதல்வர் கூட்டும் எம்பி-க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும்" - விசிக தலைவர் திருமா

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானதால் பிடிவாரன்ட் ரத்து!

பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டம் ஐசியூ-வில் அனுமதி

"லோகேஷ் கனகராஜ் தன் முதல் படத்திலேயே பிரமாதமான ஆக்சன் கதாநாயகனாக மிளிர்கிறார்" - வசந்த பாலன் பாராட்டு

"டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகாரளிக்கலாம்" - ஐகோர்ட் அதிரடி

"கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. தவெக ஆட்சிக்கு வந்து 60 நாளில் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வாங்கியது எப்படி" - கே.என்.நேரு கேள்வி

"விடியல் பயணத்தில் விடியலை எடுத்துவிட்டீர்கள். பரவாயில்லை, தமிழக மக்களுக்கு திமுக மீண்டும் விடியலைக் கொடுக்கும்" - முன்னாள் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக யூ டியூபரும் தவெக செய்தி தொடர்பாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

"தங்கம் தென்னரசு பேச்சில் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் நிறைய இருந்தது" - அமைச்சர் ராஜ்மோகன்

"ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்குவதில்லை, அப்படி வாங்கினால் முதல்வர் எங்களை இங்கே உட்கார விடமாட்டார்" - அமைச்சர் ஆனந்த்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in