எப்படி இருந்தது திருச்செந்தூர் கோயில் மகா கும்பாபிஷேகம்? - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Tiruchendur Subramaniaswamy Temple Kumbabhishekam

Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. | படங்கள்: மு.லெட்சுமி அருண்

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோடி அசைத்து, கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தொடங்கிவைத்தார். வேத பண்டிதர்கள் புனித நீரினை ராஜகோபுரம், மூலவர் கோபுரங்கள் மற்றும் வள்ளி தெய்வசேனை கோபுரங்களுக்கு குடமுழுக்கு செய்தனர்.

கும்பாபிஷேகம் நடைபெற்றபோது ராஜகோபுரத்தின் மேற்கு பக்கம்.

குடமுழுக்கு புனித நீரினை சுமந்தவாறு, பக்தர்களின் மேல் தெளிக்க பறந்த ட்ரோன்.

கும்பாபிஷேக நிகழ்வுகளை காண வந்த பக்தர்களின் ஒரு பகுதியினர்.

கும்பாபிஷேகத்தின் புனித நீர் பக்தர்களின் மேல் பீய்ச்சியடிக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் புனித நீரின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு முண்டியடித்தனர்.

பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்க முண்டியடித்த பக்தர்கள்.

கோயில் கட்டிடத்தின் மேற்பகுதியில் திரண்டிருந்த விஐபி பக்தர்கள்.

கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காண கடற்கரையில் அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள்.

குடமுழுக்கு நிகழ்ச்சிக்காக யாக சாலையில் பல யாக குண்டங்கள் நடத்தப்பட்டன. குடமுழுக்கு முடிந்த பின்னர் யாக குண்டங்களில் இருந்த சாம்பலை சேகரிக்க ஆர்வமுடன் முயற்சி செய்தனர் பக்தர்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், திருச்செந்தூர் நகரத்தின் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக கோவில் வாசல் வரை இலவச பேருந்து சேவையும் நடைபெற்றது.

12 வருடங்களுக்குப் பின் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக, பக்தர்களுக்காக திறந்து வைக்கப்பட்ட ராஜகோபுரத்தின் மேற்கு வாசல் பகுதி.

திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.

ஜப்பான் நாட்டில் இருந்து ஆர்வமுடன் வந்த பக்தர்கள்.

கும்பாபிஷேக நாளுக்கு முந்தைய இரவு ஒளி வெள்ளத்தில் மின்னிய சுப்பிரமணிய சுவாமி கோயில்.

ராஜகோபுரம், சண்முகர் கோபுரம் மற்றும் மூலவர்  வள்ளி தெய்வசேனை கோபுரங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

வண்ண விளக்குகளால் காட்சியளிக்கும் யாக சாலை, யாக சாலையில் நடக்கும் இறுதிக்கட்ட பூஜைகளை பார்க்க ஆவலுடன் இரவு முழுவதும் காத்திருந்த பக்தர்கள். ராஜகோபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது.

கோயிலின் மேற்பகுதி முழுவதும் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது.

சண்முகர் மண்டபம் உட்பகுதியில் கோயிலின் நுழைவாயில்கள் பிரம்மாண்டமான வகையில் கண்ணைக் கவரும் வண்ணம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக காட்சியளித்தது.

கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காண முந்தைய நாள் இரவே வந்த பக்தர்கள், கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில் ஆங்காங்கே இடம்பிடித்து காத்திருந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காண இரவே வந்த பக்தர்கள், கோயிலின் முன்பு உள்ள கடற்கரையிலேயே தங்கி இருந்தனர்.

கும்பாபிஷேகத்துக்காக இரவு முதல் யாக சாலையில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. இதை, யாக சாலையைச் சுற்றி பக்தர்கள் அமர்ந்தவாறு  கண்டு களித்தனர். மின்னொளியில் ராஜகோபுரம் மற்றும் செந்திலாண்டவர் என்ற வாசகம் அடங்கிய அலங்காரங்கள் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.

கும்பாபிஷேகத்தைக் காண கடற்கரைப் பகுதியில் திரளும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்கள் படகில் கண்காணித்த வண்ணம் இருந்தனர். மேலும், நீரில் செல்லும் மோட்டார் வாகனத்தில் ரோந்து சென்றனர்.

கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in