எப்படி இருந்தது மதுரை முருக பக்தர்கள் மாநாடு? - ஒரு ரவுண்டப் போட்டோ ஸ்டோரி

madurai murugan maanaadu
madurai murugan maanaadu
Published on

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கர்கள் வருகை தந்தனர். காவடி எடுத்து வந்து பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முதல் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்னாமலை வரை மாநாட்டில் பேசினர். | படங்கள்: நா.தங்கரத்தினம்

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து காலை காலை முதலே ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கினர்.

மதுரை மாநகர எல்லைகளில் போலீஸார் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து, தீவிர சோதனைக்குப் பிறகே வெளியூர் பக்தர்களின் வாகனங்களை அனுமதித்தனர். அப்போது போலீஸார் காட்டிய கெடுபிடியால் சில இடங்களில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநாட்டுத் திடலின் முகப்புத் தோற்றம் கோபுரங்கள் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மாநாட்டுப் பகுதிக்கு வரிசையாக செல்வதற்குத் தடுப்புகளை அமைத்து வழித்தடங்களை ஏற்படுத்தியிருந்தனர். தன்னார்வலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

முக்கிய நிர்வாகிகள், விஐபிக்கள் பிரதானச் சாலையிலிருந்து மேடைக்குச் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. நண்பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. அதை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். ஆனால், மாலையில் லேசான சாரலுடன் மாநாடு நடைபெற்றது.

மேடையைச் சுற்றியுள்ள 16-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா எல்இடி திரைகள் வைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இருக்கைகளில் இடம் கிடைக்காதவர்கள், நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தனர். மாநாடு தொடங்குவதற்கு முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்து, வேன், இரு சக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். வாகனங்களை நிறுத்த மாநாட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் போதிய பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டில் பங்கேற்ற வெளியூர் பக்தர்கள் பலர் தங்களது வீடுகளில் வைத்திருந்த வேல்களையும், புதிதாக வாங்கிய வேல்களையும் கொண்டு வந்தனர்.

தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்களில் பக்தர்கள் காவடிகளை எடுப்பதுபோல் மதுரை மாநாட்டுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். அவர்கள் காவடி ஊர்வலத்தில் ‘வெற்றி வேல், வீரவேல்’, ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.

மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க, மாநாட்டுக்கு வரும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை எல்லைப் பகுதி சுற்றுச் சாலைகளில் போலீஸார் திருப்பிவிட்டனர். அப்படியிருந்தும் மாநாடு நடைபெறும் சுற்றுச்சாலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு மாநாட்டுத் திடலுக்கு நடந்து சென்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டுக்காக காவல் துறையினர் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். அதனால், மாநாட்டுத் திடல், சுற்றுச் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார் நிபந்தனைகள் மீறப்படுகிறதா என கண்காணித்தனர். கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் மீறும் வாகனங்களை போலீஸார் வீடியோ எடுத்தனர்.

மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அடிப்படை வசதிகளைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், வெளியூர் பக்தர்களுக்கு வழிகாட்டவும் 27 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவசர சிகிச்சை தேவைக்காக 13 மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

மாநாட்டையொட்டி 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாநாட்டு மேடை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் மாநாட்டுப் பகுதிகளில் அடிக்கடி சோதனையிட்டனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, “முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் விழா அல்ல. தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் மாநாடு. ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சித் தலைவராக மாநாட்டுக்கு வரவில்லை. முருக பக்தராக வந்துள்ளார். சனாதனத்தை ஒழிப்போம் எனச் சொல்வதுதான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம்” என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரிய ஆன்மிக மாநாடு இது. கட்சி மாநாடு அல்ல. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவது, திருமாவளவன் போன்றோருக்குப் பிடிக்கவில்லை. மற்ற மதங்களில் இதுபோன்ற மாநாடு நடத்தினால், மனித சங்கிலிப் போராட்டம் நடத்தும் துணிவு அவருக்கு வருமா?” என்றார்.

மேலும், “முருக பக்தர்கள் ஒருங்கிணைவதை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? காவல் துறையினர் இந்த மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்தியும், எந்த வசதிகளையும் செய்து தரவில்லை” என்றார். எல்.முருகன்.

மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. மடாதிபதிகள், ஜீயர்கள், சிவாச்சாரியார்கள், சாதுக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையிலானோர் வரவேற்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “ஏறத்தாழ 7 லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இது முருக பக்தர்கள் மாநாடு. அரசியல் மாநாடு அல்ல. தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும்” என்றார்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்த மாநாட்டைப் பார்த்து பலர் மலைத்துப் போயிருக்கின்றனர். பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். அந்த தடைகளை கடந்து மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நம்மிடையே ஒரே கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. அத்தகைய கலாச்சாரத்தைப் பாதுகாக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்றார்.

மேலும், “இந்த அளவுக்குப் பக்தர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு இருக்கைகளில் அமர்ந்திருக்கும் கூட்டத்துக்கு இணையான கூட்டம், வெளியே இருக்கிறது. இந்த இடமே சொர்க்கபுரிபோல உள்ளது. இந்த இடத்தில் ஆன்மிகம் கலந்த சக்தி இருப்பதை உணர்கிறேன்” என்றார் நயினார் நாகேந்திரன்.

முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசும்போது, “நான் 14 வயதில் சபரிமலைக்கு போனவன், தைப்பூசத்துக்கு திருத்தணிக்கு சென்றவன். சென்னையில் மயிலாப்பூரில் நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு சென்றவன். நெற்றியில் விபூதி பூசுவதை பற்றி கேள்வி கேட்டனர். இங்கு ஒரு கிறிஸ்தவர், கிறிஸ்தவராக இருக்கலாம். ஒரு முஸ்லிம் தனது மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஒரு இந்து தனது மதத்தை பின்பற்றினால், மதவாதி என்கின்றனர். இதுதான் போலி மதச்சார்பின்மை” என்றார்.

மேலும், “உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீ்ங்களும் கடைபிடியுங்கள். எங்கள் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்யாமல் இருங்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், வெளிநாட்டில் இருந்து வந்த மதத்தை பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கு துணிச்சல் உண்டா. அதனால்தான் சொல்கிறேன் எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்றார் பவன் கல்யாண்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்; 2026 தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாக்கு வங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in