
விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரில் நடைபெற்ற பனை கனவுத் திருவிழாவில் இடம்பெற்ற கைவினைப் பொருட்கள் வெகுவாக கவனம் ஈர்த்தன. | படங்கள்: எம்.சாம்ராஜ்
பனையால் கிடைக்கும் நுங்கு பதநீர் கருப்பட்டி, பனை ஓலையால் பின்னப்பட்ட விசிறி கிளுகிளுப்பு, அணிகலன்கள், கைவினை பொருட்கள் முதலானவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.
அழிந்து வரும் பனையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றது.
பிறகு, நரசிங்கனூர் மக்கள் பதநீரை தலையில் குடங்களாக எடுத்து வந்து பனை மரத்தின் முன்பு வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.
பதநீர் இலவசமாக வழங்கப்பட்ட இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். | படங்கள்: எம்.சாம்ராஜ்