
ஏற்காடு 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி களைகட்ட தொடங்கியிருக்கிறது. அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியில் மேட்டூர் அணை, வன விலங்குகள், கார்ட்டூன் உருவங்கள், ஒற்றைக்கொம்பு குதிரை உள்ளிட்ட பல்வேறு மலர் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. படங்கள்: எஸ்.குரு பிரசாத்