
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் கமிட்டி) கருத்தரங்கு கோவை குரும்பபாளையம் எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் இன்றும் (ஏப்.26), நாளையும் (ஏப்.27) நடக்கிறது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில் பேசும் கட்சியின் தலைவர் விஜய் இன்று கோவை வந்தடைந்தபோது, அவருக்கு தவெக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.