
78-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளம் அருகில் வரும் முதல்வரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஸ்டாலின் ஏற்றார். 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். | படங்கள்: ம.பிரபு