2024-25-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் 23-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வில், மத்திய நிதியமைச்சருடன் நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.