prime minister modi at Moscow
prime minister modi at Moscow

மாஸ்கோவில் பிரதமர் மோடி - போட்டோ ஸ்டோரி

Published on
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புதினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பின்போது புதினிடம் பேசிய பிரதமர் மோடி,

“போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டு வர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது” என்று புதினிடம் மோடி கூறினார்.

“வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கண்காட்சி மையத்தை பார்வையிட்டனர்.

இந்த அரங்கில் இந்திய மற்றும் ரஷ்ய மாணவர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினருக்கும், பூமிக்கும் பயனளிக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அவர்களைப்  பிரதமர் ஊக்குவித்தார்.

மாஸ்கோவில் உள்ள அறியப்படாத வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அங்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.

அறியப்படாத வீரர்களின் நினைவிடம் என்பது மாஸ்கோவின் கிரெம்ளின் சுவரில் அமைந்துள்ள ஒரு போர் நினைவுச் சின்னமாகும். இது இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்த சோவியத் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவரை அங்கிருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அன்பான வரவேற்புக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

தமது மூன்றாவது பதவிக் காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாறுவதே அரசின் நோக்கமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in