ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானி ஆறும், மாயாறும் கூடும் இடத்தில், பவானிசாகர் அணை (கீழ்பவானி அணை) கட்டும் பணி 1948-ம் ஆண்டு தொடங்கியது. இதனால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட கிராம மக்கள், பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர். இக்கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த மாதவராய பெருமாள், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் ‘டணாய்க்கன் கோட்டை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.