மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவாறு கை அசைத்தபடி வாகனத்தில் பிரதமர் சென்றார். இந்நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.