பிரதமர் மோடி யானை சவாரி @ காசிரங்கா | புகைப்படத் தொகுப்பு

Prime Minister Modi elephant ride at Kaziranga National Park

Published on
அசாமில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசியப் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். யானை சவாரியும் மேற்கொண்டார்.

காசிரங்கா தேசியப் பூங்காவைப் பார்வையிடுமாறும், அதன் இணையற்ற நிலப்பரப்புகளின் இணையற்ற அழகை அனுபவிக்குமாறும் மக்களை மோடி கேட்டுக்கொண்டார்.

இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் உள்ள பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் கலந்துரையாடிய அவர், இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தைப் பாராட்டினார்.

லக்கிமை, பிரத்யும்னா மற்றும் பூல்மாய் யானைகளுக்கு கரும்பு வழங்கிய காட்சிகளையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

“அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கம்பீரமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு  விலங்கினங்கள், தாவரங்களை கொண்டுள்ளது” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

“காசிரங்கா தேசிய பூங்காவைப் பார்வையிடவும், அதன் நிலப்பரப்புகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று மோடி அழைப்பு விடுத்தார்.

“ஒவ்வொரு வருகையும் ஆன்மாவை வளப்படுத்தும் மற்றும் அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் இது” என்று பிரதமர் மோடி சிலாகித்துள்ளார்.

“நமது வனங்களையும் வனவிலங்குகளையும் தைரியமாக பாதுகாக்கும் முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் உரையாடினேன். நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என்று மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்

“லக்கிமை, பிரத்யும்னன், பூல்மாய் ஆகியவற்றுக்கு கரும்பு ஊட்டினேன். காசிரங்கா காண்டாமிருகங்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு ஏராளமான யானைகளும் உள்ளன, மேலும் பல உயிரினங்களும் உள்ளன” என்று மோடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in