சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (பிப்.10) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது. சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்றுள்ளது. | படங்கள்: அகிலா ஈஸ்வரன்
முன்பு கலைவாணர் அரங்க வளாகத்திலேயே மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும். | படங்கள்: அகிலா ஈஸ்வரன்