எண்ணூர் எண்ணெய் கசிவு... நீர்நிலைகள், படகுகள், வீடுகள் பாதிப்பு - போட்டோ ஸ்டோரி

Published on
மிக்ஜாம் புயல் தாக்கமே இன்னும் சென்னையையே ஆட்டி படைத்து வருகிறது. இதற்கிடையே, சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். | படங்கள்: ஜோதி ராமலிங்கம்

எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்ததுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள்  உடலிலும், உடையிலும் எண்ணெய் படிந்ததுள்ள காட்சிகள் மக்களை வேதனைப்பட வைத்துள்ளது.

எண்ணூர் எண்ணெய் கசிவால் கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

அப்பகுதியில் ஏராளமான மீன்கள் இறந்து கிடக்கின்றன. மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளும் தடிமனான எண்ணெய் படலத்தால் பாழாகியுள்ளன. வீடுகளின் சுவர்களிலும் எண்ணெய் படிந்துள்ளது. இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது.

சென்னை மணலி, எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது குறித்து சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த அமர்வின் நீதித்துறை உறுப்பினரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினரான சத்யகோபால் ஆகியோர் எண்ணெய் கசிவு பாதிப்பு உள்ள இடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.

மேலும், எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

இக்குழு ஆய்வு செய்ய உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா 11-ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு, எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் உயர்நிலை குழு பரிந்துரையை ஏற்போம் என தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, தலைமைச் செயலரை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செயலர் சுப்ரியா சாஹூ ஆகியோர் நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல என்றும், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பேரிடர் என பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் சிபிசிஎல் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டருக்கும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீட்டருக்கும் தடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் கூறும்போது, கடலில் எண்ணெய் கலக்கவில்லை என்பது கடலோர காவல்படை ஆய்வில் உறுதியாகியுள்ளது. கழிமுகத்தில் இருந்து கடலுக்குள் எண்ணெய் செல்லாமல் தடுக்க ஒரு கிமீ தூரத்துக்கு மிதவைகள் அமைக்க வேண்டியுள்ளது. தற்போது வரை 75 மீட்டருக்கு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணெய் கசிவை தடுக்கவும், கலப்பை சரிசெய்யவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை துரிதப்படுத்துமாறு தமிழக அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்டஇடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்பதை சிபிசிஎல் உறுதிசெய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, எண்ணெய் கசிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்புகளுக்கு சிபிசிஎல்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சிபிசிஎல் வளாகத்தில் இருந்து எண்ணெய் கலந்த நீர், மாசுபட்ட நீர் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால், அத்தகைய செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு  வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேவையான ஆட்கள், இயந்திரங்கள் மூலம் எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கசிவைஅகற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்ற சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளன. எண்ணெய் கழிவுகள், சேதமடைந்த பொருட்களை அகற்றும் பணியில் அனுபவம் மிக்க முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என சுப்ரியா சாஹு  கூறியுள்ளார்.  தற்போது அப்பகுதி மக்களின் வாழவாதாரம் கேள்விகுறி ஆகியுள்ளது.

படங்கள்: ஜோதி ராமலிங்கம்
படங்கள்: ஜோதி ராமலிங்கம்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in