வடியாத மழைநீரில் தவிக்கும் வட சென்னை மக்கள் | புகைப்படத் தொகுப்பு

Published on
மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  | இடம்: புழல் அருகே தீர்த்தகிரியாம்பட்டு மற்றும் மாதாவரம் | படங்கள்: ஜோதிராமலிங்கம்

குறிப்பாக மேற்கூறியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் தவிக்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி முழுவதுமாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

வட சென்னையின் முக்கிய பகுதியான சூளைப் பகுதியில் தண்ணீர் தேங்கி சாக்கடை போல காட்சியளிக்கிறது. அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் சேதமடைந்து இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுல்லாமல் நீர் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.

எண்ணூர், மணலி போன்ற பகுதிகளிலும் இதே பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் தெர்மாகோலை பயன்படுத்தி மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி வடசென்னையை காக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மழை வெள்ளம் மற்றும் அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி நிறுவனங்களை மூழ்கடித்துள்ளது. பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதடைந்துள்ளதாகவும், கழுத்தளவு நீரில் மக்கள் பயணிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

வண்ணாரப்பேட்டையில் இதுவரை தண்ணீர் வடியவில்லை, மின் விநியோகம் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 200 அரசு பேருந்துகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, பேஷன் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளிலும் இதே நிலை தொடர்கிறது. உணவு, குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூடகிடைக்கவில்லை. பால் அதிகளவு விலையில் விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

இடம்: திருவொற்றியூர் | படங்கள்: ஜோதிராமலிங்கம்

இடம்: மின்ட் | படங்கள்: ஜோதிராமலிங்கம்
இடம்: மின்ட் | படங்கள்: ஜோதிராமலிங்கம்
இடம்: கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே. | படங்கள்: ஜோதிராமலிங்கம்

இடம்: வியாசர்பாடி | படங்கள்: ஜோதிராமலிங்கம்

இடம்: பேசின் பாலம் | படங்கள்: ஜோதிராமலிங்கம்

இடம்: வியாசர்பாடி
இடம்: வியாசர்பாடி

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in