புயல்களின் பெயர்தான் மாறுகிறதே தவிர, பாதிப்புகள் மாறுவதில்லை. மரம், மின்கம்பம் சாய்வது, பல மணி நேர மின்தடை,
சாலையெங்கும் வெள்ளம், வீடுகளில் மழைநீர் என, புயல் வரும்போதெல்லாம் பாதிக்கப்படுகிறது சென்னை. இதனால், தலைநகரமும்,
புறநகர் பகுதிகளும் ஸ்தம்பிக்கின்றன. தேசிய, மாநில அரசு இயந்திரங்கள் தீவிரமாக களமிறங்கி, மீட்பு, நிவாரணப் பணிகளில் துரிதமாக ஈடுபட,
அதே வேகத்தில் சகஜ நிலைக்கு திரும்பிவிடுகின்றனர் மக்கள். ‘மிக்ஜாம்’ பாதிப்புகளில் இருந்தும் அதேபோல மீளத் தொடங்கியிருக்கிறது சென்னை.
சென்னை தாம்பரம் வரதராஜபுரம் அடுத்த மதனபுரம் சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பழுதான கார், வேன் ஆகியவை ஆங்காங்கே நிற்கின்றன. மக்கள் தங்கள் உடமைகளுடன் நிவாரண முகாம்களுக்கு செல்கின்றனர். தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் படகு மூலம் மீட்டு அழைத்து வரப்படுகின்றனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |