சென்னையில் புதன்கிழமை இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்னும் சில இடங்களில், குறிப்பாக புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்கிறது. மழைநீரை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.