இதுகுறித்து ரிக் தயாரிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் பரந்தாமன் மற்றும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சாலைப் பணிகள் மேற்கொள்ளும் மற்றொரு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களிடம் உள்ள சிடி-5 என்றநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி, உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் 6 அங்குலம் அளவுக்கு துளையிட்டு, சுரங்கப் பாதைக்குள் சிக்கியதொழிலாளர்களுக்கு உணவு, மருந்து மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.