தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மற்றும் கோவையில் புத்தாடைகள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது: படங்கள் | ர.செல்வமுத்துகுமார் மற்றும் ஜெ .மனோகரன்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி என்.எஸ்.பி சாலையில் புத்தாடை வாங்குவதற்காக குவிந்த மக்கள் கூட்டம்.
திருச்சி என்.எஸ்.பி சாலையில் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதிய நிலையில் ஒரு சில வாகனங்கள் அவ்வழியே அனுமதிக்கப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
புத்தாடை வாங்குவதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோ திருச்சி என்.எஸ்.பி சாலைக்கு வந்த நிலையில், மக்கள் வெள்ளத்துக்கு நடுவே தத்தளித்தபடி வந்த ஒரு காரை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கோவை பெரிய கடைவீதியில் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்