மும்பை ‘டபுள் டக்கர்’ பஸ் இனி நினைவு வீதிகளில் மட்டுமே... | போட்டோ ஸ்டோரி

Published on
மும்பை மாநகராட்சி சாலைகளில் தனது சக்கரக் கால்களின் ரப்பர் தடம் பதித்து ஓடிய இரண்டடுக்கு சிவப்பு ரதம் ஒரு வெள்ளிக்கிழமையுடன் தனது ஒட்டத்தை நிறுத்திக்கொண்டது.

மும்பையின் அடையாளங்களில் ஒன்றாய் சாலைகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாய் ஓடித்திரிந்த ‘டபுள் டக்கர்’ பேருந்து செப்.15-ம் தேதியுடன் ஓய்வெடுத்துக் கொள்வதாய் விடைபெற்றுக்கொண்டது.

1990-களில் BEST என்னும் மும்பை போக்குவரத்துக்கழகத்தில் 900 இரண்டடுக்கு பேருந்துகள் இருந்தன. 90-களின் பிற்பகுதியில் அவைப் படிப்படியாக குறைக்கப்பட்டன.

2008-ல் இந்த இரட்டை அடுக்கு ரதங்களின் அதீத செலவுகளைக் காரணம் காட்டி பேருந்துகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தது BEST நிர்வாகம். கடைசியாக மும்பை சாலைகளில் ஒற்றை இலங்கங்களில் ஓடிய பேருந்துகளும் விடைபெற்றுக்கொண்டன.

இறுதியாக எங்களிடம் மூன்று திறந்த நிலை பேருந்துகள் உட்பட 7 இரண்டடுக்கு பேருந்துகள் இருந்தன. அதில் மூடிய நிலையிலான பேருந்து செப்.-15க்கு பிறகு இயக்கப்படாது. திறந்த நிலை பேருந்து அக்.5-க்கு பின்னர் இயக்கப்படாது என்றார் BEST செய்தித் தொடர்பாளர்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும், சில விஷயங்கள் நினைவுகளாகவாவது தொடர விரும்புவது மனித மன விந்தைகளில் ஒன்று. இதற்கு மும்பைவாசிகளும்  விதிவிலக்கு இல்லை.  தங்களின் பால்யங்களை சுமந்து திரிந்த  இரண்டடுக்கு பேருந்தை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கற்றில் அலையாடி ஆனந்த கூத்தாடும் நுரைப்பந்து எதிர்பாராத தருணம் ஒன்றில் வெடித்து சிதறிவது நியதி எனத் தெரியும். அது காலத்தின் கட்டாயம். ஆனால் அது  ஏற்படுத்திவிட்டுச் செல்லும் வெற்றிடம்... அந்தச் சின்ன அதிர்வு தரும் பேரோலம்... அப்படி ஒரு வலியை, சுகமான சுமையை மும்பை வாசிகளின் நினைவுகளில் வரைந்து விட்டுச் சென்றிருக்கிறது இந்த மாடிப் பேருந்து.

அதற்கு கட்டியம் கூறுகிறது நெட்டிசன்களின் வலைதள பகிர்வுகள். தன் கடைசி வெள்ளட்டத்தை நடத்திய பேருந்தின் வீடியோவைப் பகிர்ந்து  குட் பாய் டபுள் டக்கர் பஸ் என பிரியா விடைகொடுத்துள்ளனர்.

அதில் ஒருவர் தனது பால்யத்தை தோண்டிப் பார்த்துள்ளார். அவரின் பதிவில், ஒரு உள்ளரங்க மாடிப்படிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கில் நுழைவது போலவே இருக்கும் டபுள் டக்கர் பேருந்தில் ஏறுவது. நிச்சயம் அங்கு போட்டி இருக்கும். காரணம் சினிமா காட்சிகள் போல விரியும் வீதிகளை வேடிக்கைப் பார்க்க மாடி பேருந்தில் ஒரு முன்னிருக்கையில் நண்பனை முந்திக்கொண்டு யார் முதலில் இடம்பிடிப்பது எனத் தனது பால்யத்தை தோண்டிப் பார்த்துள்ளார்.

மற்றொருவர் இந்த பேருந்தின் பார்வை என்னுள் விதைத்த ஆனந்தத்தை இனி நான் நிரந்தரமாக இழப்பேன். நமக்கு நெருக்கமான விஷயங்கள் விடைபெற்றுக்கொண்டு தனிமையில் தள்ளி வருகிறது என வலியை பகிரந்துள்ளார்.

டபுள் டக்கர் பேருந்தின் பரவசத்துக்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை போலும், இந்தியவின் பிரபலமான தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, ஹலோ மும்பை போலீஸ் என்னுடைய முக்கியமான பால்ய நினைவுகள் திருடு போவது குறித்து நான் எங்கு புகாரளிக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நூற்றாண்டுகளை நெருங்கும் முன் தனது  ஓட்டத்தை நிறுத்திக் கொண்ட மும்பை இரண்டடுக்குப் பேருந்து பயணிகளின் நினைவுகளில் பவனி வருவதை யார்தான் நிறுத்த முடியும்... குட்பை டபுள் டக்கர் பஸ்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in