லடாக் ஏரி முதல் கார்கில் போர் நினைவிடம் வரை - ராகுல் காந்தி பயணம் | போட்டோ ஸ்டோரி

Published on
காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி லடாக்கில் உள்ள பான்காக் ஏரி முதல் கார்கில் போர் நினைவிடம் வரை பல இடங்களுக்கும் பயணித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சில மாதங்கள் முன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப் பயணம் சென்றார். அதன் பின்னரும் நடைப் பயணத்தில் போகாத பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்திக்கிறார். நடைப் பயணத்தின்போது காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி, லடாக் செல்லவில்லை. இந்நிலையில், ராகுல் தற்போது காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி லடாக்கில் உள்ள பான்காங் ஏரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். லடாக்கில் அமைந்துள்ள அழகிய பான்காங் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் 50 சதவீத பகுதி சீன எல்லையிலும் 40 சதவீத பகுதி இந்திய பகுதியிலும் உள்ளன. பத்து சதவீத பகுதி சர்ச்சைக்குரிய இடமாக நீடிக்கிறது.

லடாக் யூனியன் பிரதேச தலைநகர் லே பகுதிக்கு ராகுல் காந்தி இரு நாட்கள் பயணமாக சென்றார். லடாக்கின் பான்காங் ஏரிக்கு அவர் செல்ல விரும்பியதால் அவரது லடாக் பயணம் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

ராகுல் காந்தி லே நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பான்காங் ஏரி பகுதிக்கு சென்றார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட படங்கள் வைரல் ஆகின.

“பான்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறேன். உலகின் மிக அழகிய பகுதிகளில் இந்த ஏரியும் ஒன்று என எனது தந்தை ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்

லடாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண் ராகுல் காந்தி, அங்கு உள்ளூர் மக்கள், எல்லையில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரைச் சந்தித்து அவர்ளோடு உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து கார்கிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி,

லடாக் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்த பேரணியில் அவர் கொண்டார்.

ராகுல் காந்தி பேசும்போது, “லடாக் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் சொன்னது வருத்தமளிக்கிறது. அது பொய்” என்றார்.

மேலும், “மற்றத் தலைவர்கள் அவர்களின் மனதின் குரலை பேசுவதில் மும்முரமாக உள்ளார்கள். நான் உங்கள் மனதின் குரலைக் கேட்க விரும்பினேன். அதில் ஒரு விஷயம் மிகத்தெளிவாக தெரிகிறது. காந்தி மற்றும் காங்கிரஸின் சிந்தாந்தங்கள் லடாக்கின் ரத்ததிலும் மரபணுவிலும் கலந்துள்ளது

கார்கில் செல்லும் வழிதோறும் அங்குள்ள மக்களையும் ஆங்காங்கே ராகுல் காந்தி சந்தித்தார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in