தற்போது முதல்வராக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளை விட இம்முறை அதிக சிறப்பாக அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரகன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.