நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய ‘சந்திரயான்-3’ தருணங்கள் - போட்டோ ஸ்டோரி

Published on
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம், ரகுநாதன் மற்றும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான்-3, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, 3 நிலைகளில் படிப்படியாக அதன் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்படும். இந்த முறை சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் மூலமாக கீழ் இறக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் சில  வேதிப்பொருட்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சந்திரயான்-3 புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி செல்லும் என்று இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 05:47 மணிக்கு, சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

விண்ணில் செலுத்தப்பட்ட எல்விஎம் 3 வகை ராக்கெட் 16 நிமிடங்களுக்கு பிறகு அதன் எரிபொருள் கலம் விடுவிக்கப்படும் என்றும், நீள்வட்டப்பாதையில் இந்த ராக்கெட் பூமியை சுமார் 5 அல்லது 6 முறை சுற்றி வரும் என்றும், ஒவ்வொரு சுற்றின் போதும் ராக்கெட்டின் உயரம் அதிகரித்து 36,500 கிலோ மீட்டர் வரையிலான உயரத்திற்கு செல்கையில், அது சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் இந்த ராக்கெட் சென்று விடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

இந்தத் திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார் ராக்கெட் இயக்க இயக்குநர் பிஜூ தாமஸ், விண்கல இயக்குநர் டாக்டர் பி வீரமுத்துவேல் ஆகியோர்  ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, இத்திட்டம் குறித்து விவரித்தனர்.

சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை அருகில் சென்ற பிறகு லாண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மாலை 5.47 மணியளவில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும், அதன்பிறகு அதிலிருந்து ரோவர் வாகனம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.

சந்திரயான் 3 திட்டம்  வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் காண மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வந்திருந்தார்.

ஜிதேந்திர சிங் பேசுகையில்,
ஜிதேந்திர சிங் பேசுகையில்,
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' என்று ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கியதும் அரங்கில் கரகோஷம் எழுந்தது.

சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை பிரான்ஸில் இருந்தவாறு கவனித்து வந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திரயான்-3 படைத்துள்ளது. அது உயரப் பறந்து ஒவ்வொரு இந்தியரின் லட்சியங்களையும், கனவுகளையும் உயர்த்தியுள்ளது” என்றார்.

மேலும் “இந்த மகத்தான சாதனை நமது விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அவர்களது உணர்வுக்கும், மதிநுட்பத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

மேலும், “இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கிய 4-வது தேசம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அது நிச்சயமாக ஒரு வியத்தகு கொண்டாட்டமாக இருக்கும். இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்

இஸ்ரோவின் நிலவு மிஷன்கள்: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று (ஜூலை 13) மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷனில் 54 பேர் பெண்கள்: இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் 54 பேர் பெண்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் பொறியாளார்கள், விஞ்ஞானிகள் பதவியில் இருப்பவர்களாவர். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் இணை இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாக பணி புரிந்துள்ளனர்.

திட்டத்தின் பின்னணியில்... - சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார். ராக்கெட் இயக்குநர் பிஜு சி தாமஸ். விண்கல இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல். இவர்களுடன் சேர்த்து 54 பெண்கள் இந்தத் திட்டத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளனர்.

இவர்களில் ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் தளத்தில் வர்ணனையாளராக இருக்கும் பி.மாதுரி தான் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த பெண்ணாக இருக்கிறார். மற்றவர்கள் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் ஆவர்.

முன்பு மங்கள்யான் இப்போது சந்திரயான்... - ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா சந்திரயான் - 3 திட்டத்தின் முக்கிய முகமாக இருக்கிறார். இவர் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்வெளித் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியவராவார்.

ரிது கரிதால் லக்னோ பல்கலைக்கழகத்தில் 1996-ஆம் ஆண்டு இயற்பியல் பயின்றார். அதன் பின்னர் பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தில் எம்.டெக் பயின்றார். 1997-ல் இஸ்ரோவில் இணைந்த இவர் பல்வேறு திட்டங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சர்வதேச இதழ்களில் இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரமாகியுள்ளன.

முன்னதாக, சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து, திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள செங்காளம்ம பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in