தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. | படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி, எல். சீனிவாசன்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகளிர் பள்ளிக்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவிகளை பூங்கொத்து, சாக்கலேட் கொடுத்து வரவேற்றார்.பின்னர் மாணவிகளுக்கு புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை, காலணிகள் ஆகியனவற்றை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மாணவர்கள் நன்றாகப் படித்துப் பெருமை சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் என அனைத்துமே துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்குத் திரும்பிய மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் வரவேற்றனர்.
முதல்நாளான் இன்று வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களை கல்வி ஆண்டிற்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
மேலும், உலகக் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 11 மணி அளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
அதுகுறித்து மாணவர்கள்,பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.