இதுகுறித்து கொச்சி நீர்வழி மெட்ரோவின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, “நாட்டில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையில் 78 படகுகள் பயன்படுத்தப்பட உள்ளன. குறைந்தபட்சம் மணிக்கு 18 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 23 கி.மீ. வேகத்திலும் படகுகள் இயக்கப்படும். அனைத்து படகுகளிலும் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.