இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணைகள், கண்மாய்கள், குளங்களில் நீர் நிரம்பி காணப்பட்டதால் இப்பகுதியில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில், ''இந்த ஆண்டு மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நீர் நிறைந்து காணப்பட்டது. இதனால், பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது.