டிஜிட்டல் இந்தியாவுக்கான முழுமையான அணுகுமுறையின் அவசியத்தில் கவனம் செலுத்திய பிரதமர், “நாங்கள் ஒரே நேரத்தில் நான்கு திசைகளில் 4 தூண்களில் கவனம் செலுத்தினோம். முதலாவதாக, சாதனத்தின் விலை, இரண்டாவது, டிஜிட்டல் இணைப்பு, மூன்றாவது, தரவு செலவு, நான்காவது, மற்றும் மிக முக்கியமாக, 'டிஜிட்டல் ஃபர்ஸ்ட்' யோசனை . முதல் தூண் குறித்து பிரதமர் கூறுகையில், குறைந்த விலையில் சாதனங்களை தற்சார்பு மூலம் மட்டுமே அடைய முடியும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு அலகுகள் மட்டுமே இருந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார்.