20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்த டென்னிஸ் ஆளுமையான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் லேவர் கோப்பை தொடர் போட்டியுடன் விடைபெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரஃபேல் நடாலுடன் இணைந்து தனது கடைசி களத்தில் விளையாடினார் பெடரர். ஆனால், இந்த இணை 4-6, 7-6, 11-9 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றது.